பௌர்ணமி மற்றும் பௌர்ணமி விரதம் (2026)
| மாதம் / குறிப்பு | தேதி | கிழமை |
|---|---|---|
| மார்கழி பௌர்ணமி | ஜனவரி 3, 2026 | சனி |
| தை பௌர்ணமி | பிப்ரவரி 2, 2026 | திங்கள் |
| மாசி பௌர்ணமி | மார்ச் 3, 2026 | செவ்வாய் |
| பங்குனி பௌர்ணமி | ஏப்ரல் 2, 2026 | வியாழன் |
| சித்திரை பௌர்ணமி | மே 1, 2026 | வெள்ளி |
| வைகாசி பௌர்ணமி | மே 31, 2026 | ஞாயிறு |
| ஆனி பௌர்ணமி | ஜூன் 30, 2026 | செவ்வாய் |
| ஆடி பௌர்ணமி | ஜூலை 29, 2026 | புதன் |
| ஆவணி பௌர்ணமி | ஆகஸ்ட் 28, 2026 | வெள்ளி |
| புரட்டாசி பௌர்ணமி | செப்டம்பர் 26, 2026 | சனி |
| ஐப்பசி பௌர்ணமி | அக்டோபர் 26, 2026 | திங்கள் |
| கார்த்திகை பௌர்ணமி | நவம்பர் 24, 2026 | செவ்வாய் |
| மார்கழி பௌர்ணமி | டிசம்பர் 24, 2026 | வியாழன் |
அமாவாசை தேதிகள் (2026)
| மாதம் / குறிப்பு | தேதி | கிழமை |
|---|---|---|
| தை அமாவாசை | ஜனவரி 19, 2026 | திங்கள் |
| மாசி அமாவாசை | பிப்ரவரி 17, 2026 | செவ்வாய் |
| பங்குனி அமாவாசை | மார்ச் 19, 2026 | வியாழன் |
| சித்திரை அமாவாசை | ஏப்ரல் 17, 2026 | வெள்ளி |
| வைகாசி அமாவாசை | மே 16, 2026 | சனி |
| ஆனி அமாவாசை | ஜூன் 15, 2026 | திங்கள் |
| ஆடி அமாவாசை | ஜூலை 14, 2026 | செவ்வாய் |
| ஆவணி அமாவாசை | ஆகஸ்ட் 12, 2026 | புதன் |
| புரட்டாசி அமாவாசை | செப்டம்பர் 11, 2026 | வெள்ளி |
| ஐப்பசி அமாவாசை | அக்டோபர் 10, 2026 | சனி |
| கார்த்திகை அமாவாசை | நவம்பர் 9, 2026 | திங்கள் |
| மார்கழி அமாவாசை | டிசம்பர் 9, 2026 | புதன் |
பௌர்ணமி விரத முறை
பௌர்ணமி விரதம் - 12 நாட்கள்
அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை அம்மன் கௌரவமான அன்னை, இந்த பேரண்டத்தின் தாய். நாம் பூஜை செய்யும் இடமும், உடலும், மனதும் தூய்மையாக இருக்கும் போது பூஜையை தொடங்க வேண்டும். முடிந்தால் கண் மூடி 12 நிமிடம் அமைதியாக அமர்ந்து விட்டு பூஜையை தொடங்கலாம்.
அதிகாலை 6 மணிக்கு முன்பாக பூஜையை முடிக்க வேண்டும். 12 நாட்கள் விரதம் இருந்து, 12ம் நாள் பௌர்ணமி பூஜையில் விரதத்தை முடிக்க வேண்டும்.
பூஜை செய்யும் முறை அதிகாலையில் குளித்து விட்டு புது துணி (அல்லது துவைத்து உலர்த்திய துணி) உடுத்தி கொண்டு பூஜையில் அமர வேண்டும். அன்னை அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையை மனதார நினைத்து பூஜையை தொடங்க வேண்டும்.
- குலதெய்வத்தை மனதார வழிபடவேண்டும்
- 108 முறை அம்மனின் மூல மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும்
- அம்மனின் 108 போற்றி படிக்க வேண்டும்
- அம்மனின் கவசம் படிக்க வேண்டும்
முக்கிய விழாக்கள் (2026)
| விசேஷம் | தோராயமான தமிழ் மாதம் | தேதி | கிழமை |
|---|---|---|---|
| கிராம தேவதைகளின் கும்பாபிஷேக விழா | ஆவணி 9 | ஆகஸ்ட் 25, 2026 | செவ்வாய் |
| ஆலய கும்பாபிஷேக பதினெட்டாவது ஆண்டு விழா 18ம் ஆண்டு படங்கள் | ஆவணி 11 | ஆகஸ்ட் 27, 2026 | வியாழன் |
| நவராத்திரி 2026 | புரட்டாசி 25 - ஐப்பசி 4 | அக்டோபர் 11 - அக்டோபர் 20, 2026 | ஞாயிறு - செவ்வாய் |
நவராத்திரி
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.
நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரதமிருந்து வீட்டில் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்தது நவராத்திரி விழாதான்.