அம்மன் பாமாலைகள்

அம்மன் கவசம்

பேரருள் ஒளி சக்தியாக ஆதியில் விண்ணில் தோன்றி - மண்ணில்
அருள் ஒலியாகவும் நிறைந்து ஒளிஒலியாக அருள் தந்து காக்கும் தாயே! (1)

ஆதி சக்தியாக முக்காலத்தையும் இயற்றி - முத்தொழிலின்
மும்மூர்த்தியும், முச்சக்தியும் படைத்து மூவுலகிலும் அருள் தந்து காக்கும் தாயே! (2)

ஆதார சக்தியாக பிரபஞ்சத்தையும் துவக்கி - நவ கோள்களில்
ஆதவனும், சந்திரனும் பிரகாசிக்கின்ற காலமாக அருள் தந்து காக்கும் தாயே! (3)

மகா சக்தியாக ஈரெழுலோகத்தையும் உருவாக்கி - பூ உலகின்
இயற்கையான பஞ்சபூதசக்திகள் இயங்கிட அருள் தந்து காக்கும் தாயே! (4)

ஜெய சக்தியாக தச திக்குகளையும் நிர்ணயித்து - திக்மூர்த்திகளின்
எல்லையிலும் ஏகாட்சி செய்து அன்பு சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (5)

அருவ விதை சக்தியாக விந்தை யளித்து - அருகம் புல்லின்
அதிசய பரிணாம வளர்ச்சியை அருள் தந்து காக்கும் தாயே! (6)

பரிணாம சக்தியாக ஓரறிவு புல்லில் தோன்றி - ஐந்தறிவுகளின்
நின்று, நீந்து, ஊர்ந்து, பறந்து, நடந்து பலதோற்றமாய் அருள் தந்து காக்கும் தாயே! (7)

அறிவுணர்வு சக்தியாக ஆறறிவு வடிவமாக்கி - மகரிஷி முனிவர்களின்
ஆற்றல் பரிமானத்தை அளவிடும் சக்தியாய் அருள் தந்து காக்கும் தாயே! (8)

கலை ஜெய சக்தியாக ஓவியம் ஓமியம் அறிந்து - கைவிரல்களின்
மூலம் புள்ளி, கோடு, எழுத்து வரைய தெரிவிக்க அருள் தந்து காக்கும் தாயே! (9)

செல்வ ஜெய சக்தியாக பதினாறு செல்வமளித்து - சிருஷ்டியின்
இரகசிய நுட்பத்தை கணக்கிடும் சக்தியாய் அருள் தந்து காக்கும் தாயே! (10)

வீர ஜெய சக்தியாக பலவிதஸ்தானத்தில் வெற்றிகண்டு - மனதில்
பக்தியும் மனோஉறுதியுடனும் இருக்க அருள் தந்து காக்கும் தாயே! (11)

பராசக்தியாக மனதில் பக்தியளித்து - ரிஷிய முனிவரின்
வழிபடுவதற்கு கற்பலகையில் ஜோதியாக அருள் தந்து காக்கும் தாயே! (12)

முச்சக்தியாக நடுவில் திரிசூலினி நிறுத்தி - இருபக்கங்களிலும்
சூர்ய சந்திரனின் சுயற்சி அயனம் கொண்டு அருள் தந்து காக்கும் தாயே! (13)

அட்சர சக்தியாக ஓவியமே பீஜமாக்கி - பன்னிரு எழுத்தின்
சதுர மண்டலங்களில் பொருந்தி நிலையாக அருள் தந்து காக்கும் தாயே! (14)

ஜோதி சக்தியாக ரிஷிஞானத்தில் தோன்றி - பல்லாயிரமாண்டுகளுக்குமுன்
செல்லப்பிராட்டி கிராமத்தில் வீற்றுருந்து அதிசயமாய் அருள் தந்து காக்கும் தாயே! (15)

முக்கால சக்தியாக மறைந்து இக்கால சக்தியாகி - கலியுகத்தில்
எக்காலத்தையும் வென்று நற்கால சக்தியாய் அருள் தந்து காக்கும் தாயே! (16)

மூலாதார சக்தியாக மூலஸ்தானத்தில் கற்பலகையாக - அருவநிலையில்
உலகத்திற்கு அற்புத பலனுடன் அருள் தந்து காக்கும் தாயே! (17)

மூலஸ்தான சக்தியாக ஐம்பொன்னிறத்தில் - உருவ நிலையில்
தாமரை பீடத்தின் மீது காட்சி எழிலுடன் அருள் தந்து காக்கும் தாயே! (18)

குண்டலினீ சக்தியாக மகுடத்தில் ஆசியுடன் - சூர்யசந்திரன்
சுயற்சியாக ஓம்காரத்துடன் அருள் தந்து காக்கும் தாயே! (19)

சௌந்தர்ய சக்தியாக சாந்த முகத்துடன் புன்னகையளித்து - சர்வ ஜீவன்களில்
சிருஷ்டி செய்து மூல சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (20)

அஷ்டபுஜ சக்தியாக அருள் ஆயுதங்கள் ஏந்தி - இராஜ நிலையில்
அமர்ந்து புவனமெங்கும் ஆசீர்வதிக்கும் சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (21)

ஓவிய அட்சர சக்தியாக திரேதாயுகத்தில் தோன்றி - கலியுகத்தின்
நடுவில் ஐம்பொன்னிற சக்தி வடிவாய் அருள் தந்து காக்கும் தாயே! (22)

அருவ சக்தியாக உருவ சக்தியுடன் மூலஸ்தானத்தில் - யுகங்களில்
திரேதாயுகமும், கலியுகமும் இணைந்து வழிபடும் சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (23)

ஸ்ரீ சக்ர பீடசக்தியாக அஷ்டகோண விமான மாக்கி - தனக்கெனில்
ஓர் அற்புத மனோகராலயம் நிலைகொண்டு அருள் தந்து காக்கும் தாயே! (24)

இராஜயோக சக்தியாக நடுநிலையில் அமர்ந்து - தன்னை சுற்றிலும்
எண் திசைகளில் கிராம தேவதையை நிறுத்தி அருள் தந்து காக்கும் தாயே! (25)

திரிகுண சக்தியாக பலயோகங்களித்து - தன் நம்பிக்கையில்
வரும் பக்தர்கட்கு ஸ்ரீ அக்ஷ்ர லலிதாசெல்வாம்பிகை அம்மனாக அருள் தந்து காக்கும் தாயே! (26)

கலியுக சக்தியாக பல்வேறு வடிவம் எடுத்து - சாந்த நிலையில்
ஐம்பொதொன்று சக்தி பீடமாக பாரதம், அயல் தேசத்திலும் அருள் தந்து காக்கும் தாயே! (27)

ஆதி சக்தியாக பீஜாட்சர மண்டல வடிவில் - செல்லப்பிராட்டியில்
ஸ்ரீ அக்ஷ்ர லலிதாசெல்வாம்பிகையே முதன்மை பரபிரம்மசக்தி பீடமாக அருள் தந்து காக்கும் தாயே! (28)

கன்னி சக்தியாக குமரியிலே பகவதி பீடமாக்கி - காஞ்சியில்
காமாட்சியம்பிகையே ஸ்ரீ சக்ர பீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (29)

சிவசக்தியாக மதுரையில் மந்த்ரிணி பீடமாக்கி - திருவானைக்காவில்
அகிலாண்டேஸ்வரியம்பிகையே வராகி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (30)

குழல் வாய்மொழி சக்தியாக குற்றாலத்தில் பராசக்தி பீடமாக்கி - திருவாரூரில்
கமலாம்பிகையே காமகலாபீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (31)

வைஷ்ணவி சக்தியாக அம்பத்தூரில் வைஷ்ணவ பீடமாக்கி - கோகர்ணத்தில்
பத்ரகர்ணிகாம்பிகையே பத்ரகாளி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (32)

பிரம்மராம்பாள் சக்தியாக ஸ்ரீசயலத்தில் மாதவி பீடமாக்கி - பூரியில்
விமலாம்பிகையே பைரவி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (33)

சாரதாம்பாள் சக்தியாக சிருங்கேரில் சாரதாபீடமாக்கி - கொல்லாபுரத்தில்
மகாலெட்சுமியம்பிகையே லட்சுமிபீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (34)

ரேணுகாம்பாள் சக்தியாக மாதுபுரத்தில் ரேணுகா பீடமாக்கி - ஜலந்த்ராவில்
திரிபுரமாலினியம்பிகையே விஷ்வமகிபீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (35)

சியாமளாம்பாள் சக்தியாக சிம்லாவில் சியாமள பீடமாக்கி - மானேசரோவில் (திபேத்)
தாட்சாயணீயம்பிகையே குமுதா பீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (36)

சித்திதாம்பாள் சக்தியாக ஜ்வாலாமுகியில் சித்தி பீடமாக்கி - வாரணாசியில்
விசாலாட்சி, அன்னபூரணியம்பிகையே மணிகர்ணீகை பீடமாக்கி அருள் தந்து காக்கும் தாயே! (37)

மகாமாயம்பாள் சக்தியாக காஷ்மீரில் மாயா பீடமாக்கி - பிரயாகையில்
லலிதாம்பிகையே லலிதாபீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (38)

காமரூபாம்பாள் சக்தியாக காமகிரியில் காமபீடமாக்கி - கல்கத்தாவில்
மஹாகாளியம்பிகையே காளீபீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (39)

மங்கள சண்டிகாம்பாள் சக்தியாக உஜ்ஜயினில் மங்களாபீடமாக்கி - குருஷேத்திரத்தில்
சாவித்திரியம்பிகையே ஸ்தானுப்ரியை பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (40)

உமையம்பாள் சக்தியாக பிருந்தாவனத்தில் ராதாபீடமாக்கி - புஷ்கரத்தில்
காயத்திரியம்பிகையே காயத்திரிபீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (41)

ஜெயந்தியம்பாள் சக்தியாக அத்தினாபுரத்தில் ஜெயந்தி பீடமாக்கி - கேதாரத்தில்
சன்மார்க்க தாயினியம்பிகையே சன்மார்கபீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (42)

திரிபுர சுந்தரியம்பாள் சக்தியாக திரிபுராவில் சுந்தரி பீடமாக்கி - வைத்தியநாதத்தில்
ஜெயதுர்காம்பிகையே ஜெயபீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (43)

உக்ர தாராம்பாள் சக்தியாக பங்களாதேஷ்ஷிகார்புரில் தாராபீடமாக்கி - பவானிபரில்
பவானிஅம்பிகையே பவானிபீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (44)

பைரவியம்பாள் சக்தியாக பாக்கிஸ்தான் ஹிங்குலாவில் கோடரிபீடமாக்கி - சீதாகுண்டாவில்
அபர்ணாம்பிகையே கௌரிபீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (45)

மஹிஷாசூரமர்த்தினியம்பாள் சக்தியாக கோலாப்பூரில் மர்த்தினி பீடமாக்கி - சுசீந்திரத்தில்
நாராணீயம்பிகையே நாராயணீபீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (46)

சோணாம்பாள் சக்தியாக அமரகண்டத்தில் சண்டிகாபீடமாக்கி - கோதாவரில்
விச்வேஷ்யம்பிகையே விஸ்வகி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (47)

சந்திரபாகாம்பாள் சக்தியாக பிரபாஸத்தில் புஷ்கராவதீ பீடமாக்கி - சால்வடியில்
பிராம்ரீயம்பிகையே பிராமி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (48)

காபலினியம்பாள் சக்தியாக விபாஷத்தில் காபலினிபீடமாக்கி - அட்டஹாசத்தில்
புல்லராம்பிகையே மஹானந்த பீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (49)

மகாசரஸ்வதி சக்தியாக சீனாவில் நீலசரஸ்வதி பீடமாக்கி - ஸ்ரீநகரில்
சாம்பு நதேஸ்வரியம்பிகையே சாம்பவி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (50)

உமாமகேஸ்வரி சக்தியாக மதிலாவில் மகாதேவி பீடமாக்கி - ஜெஷோரில்
யசோரேஸ்வரியம்பிகையே ஈஸ்வரி பீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (51)

சிவானீயம்பாள் சக்தியாக ராமகிரியில் சிவசக்தி பீடமாக்கி - ஸ்ரீலங்காவில்
இந்திராஷீயம்பிகையை இந்திராணி பீட சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (52)

சுந்தராம்பாள் சக்தியாக ஜைன்பூரில் சங்கரிபீடமாக்கி - மலயாசலத்தில் (மலேசியா)
கல்யாணீயம்பிகையே ரம்பாபீடசக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (53)

பஹீலாம்பாள் சக்தியாக பிரம்மகிராமத்தில் பிரம்ம பீடமாக்கி - ஐம்பொதொன்றிலிருந்து
இக்காலத்தில் அறுபத்துநான்கு, நூற்றிஎட்டு சக்திபீடமாக பரிணபித்து அருள் தந்து காக்கும் தாயே! (54)

சன்மார்க்க சமய சக்தியாக சிவசக்தியம்மனாக மாறி - சைவர் வழிபடும் சமயத்தினை
ஜெகமுழுவதும் அறுபத்துமூவரின் மூலம் செப்பித்து அருள் தந்து காக்கும் தாயே! (55)

வைணவசமய சக்தியாக விஷ்ணுசக்தியம்பாளாக மாறி - வைணவர் வழிபடும் சமயத்தினை
ஜெகமுழுவதும் பன்னிருவரின் மூலம் செப்பித்து அருள் தந்து காக்கும் தாயே! (56)

சாக்த சமய சக்தியாக தனித்து அம்பிகையாக மாறி - சக்தியை வழிபடும் சமயத்தினை
ஜெகமுழுவதும் சக்தியடியர்கள் மூலம் செப்பித்து அருள் தந்து காக்கும் தாயே! (57)

சௌர சமய சக்தியாக சூரிய சக்தியம்மனாக மாறி - சூர்யனை வழிபடும் சமயத்தினை
ஜெகமுழுவதும் ஒளிமெய் ஞானிகள் மூலம் செப்பித்து அருள் தந்து காக்கும் தாயே! (58)

காணாபத்ய சமய சக்தியாக சக்தியின் புத்ரனின் சக்தியாக மாறி - கணபதியை வழிபடும் சமயத்தினை
ஜெகமுழுவதும் பக்தியடியர்களின் மூலம் செப்பித்து அருள் தந்து காக்கும் தாயே! (59)

கௌமார சமய சக்தியாக சக்தியின் புத்ரனின் சக்தியாக மாறி - முருகனை வழிபடும் சமயத்தினை
ஜெகமுழுவதும் முருகனடிமைகளின் மூலம் செப்பித்து அருள் தந்து காக்கும் தாயே! (60)

சிந்தனை சக்தியாக தினமும் துதிப்போர்க்கு நல்வினையளித்து - மனதில்
தன்நம்பிக்கையை பதிக்க அருள் தந்து காக்கும் தாயே! (61)

கருணை சக்தியாக அன்போர்க்கு நற்பண்புயளித்து - வாழ்வில்
ஈரெட்டு செல்வமுடன் அருளாசி வழங்கி அருள் தந்து காக்கும் தாயே! (62)

எண் திசை சக்தியாக ஈசான்யத்தில் சூலினிகாத்திட - கிழக்கில்
இந்திராணியம்மை யோக சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (63)

ஆக்னேய சக்தியாக அக்னியில் காளிகாத்திட - தெற்கில்
மாகேஸ்வரியம்மை சுகபுரம் சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (64)

நைருதி சக்தியாக கன்னியில் வராகி காத்திட - மேற்கில்
வைஷ்ணவியம்மை போக சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (65)

வாயு சக்தியாக வாயுவில் கௌமாரி காத்திட - வடக்கில்
பிராம்பியம்மை மோட்ச சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (66)

ஆகாச சக்தியாக மேல்திசையில் ஸ்ரீதேவி காத்திட - கீழ் திசையில்
பூமாதேவியம்மை சுகபோக சக்தியாக அருள் தந்து காக்கும் தாயே! (67)

பிந்து சக்தியாக மையத்தில் பிரம்மசக்தி காத்திட - திசையின்
கவச காப்பு சக்தியாகயிருந்து அனைவரையும் அருள் தந்து காக்கும் தாயே! (68)

நவகிரக சக்தியாக நவகோலின் சுயற்சி பார்வையில் - அணைத்து
துன்பங்களையும் அகற்றி இகபரசுகம் அளித்திட அருள் தந்து காக்கும் தாயே! (69)

நவராத்ரி சக்தியாக ஆணவ குணத்தை அடக்கி - விஜய தசமியில்
சாத்வீக குணத்தில் கல்வி, தொழில், துவங்கி ஜெயமாக்கிட அருள் தந்து காக்கும் தாயே! (70)

மூலாதார சக்தியாக மகுடத்தில் குண்டலினீ காத்திட - இயற்கையின்
யவ்வனமும், வசீகர முக புன்னகைப்புடன் அருள் தந்து காக்கும் தாயே! (71)

பாசாங்குச சக்தியாக மும்மலம் காத்திட - ஜீவன்களில்
யாவும் தன்வயப்பட்டு சாந்தம் நிறைந்து கருணையுடன் அருள் தந்து காக்கும் தாயே! (72)

சங்கு சக்கர சக்தியாக கால சக்கர சுயற்சி காத்திட - ஒலிகளின்
ஓசையை லயத்துடன் வழங்கி அருள் தந்து காக்கும் தாயே! (73)

கமண்டல அக்ஷ்மால சக்தியாக அறுபத்துநான்கு கலைகள் காத்திட - தியானத்தில்
சுப மந்திரங்களை ஜெபித்து மனதை ஒரு நிலையாக்கிட அருள் தந்து காக்கும் தாயே! (74)

அபயவரத சக்தியாக உயிர்கட்கு அபயமளித்து காத்திட - தானங்களில்
சுப வரங்களையளித்து பெருமகிழ்ச்சியோடு அருள் தந்து காக்கும் தாயே! (75)

சூல சக்தியாக திரிபுறமும் சூலினிகாத்திட - முத்தொழிலின்
ஆயுத சின்னமாக சம்பவித்து சமயத்துடன் அருள் தந்து காக்கும் தாயே! (76)

உடுக்கை சக்தியாக மார்பு ஸ்தனம் கொடியிடை காத்திட - பின்புறத்தில்
குதங்களிரண்டும் பத்ம கமலத்தில் அமர்ந்து தன் அருள் தந்து காக்கும் தாயே! (77)

திருவடி சக்தியாக தொடை முழங்கால் பாத கமலங்களை வணங்கி - ஸ்தலத்தில்
பஞ்ச, அஷ்டாங்க நமஸ்கரிப்பவர்க்கு ஸ்தல வாஸினியாக அருள் தந்து காக்கும் தாயே! (78)

காக்கும் சக்தியாக தன்னயே கவசமாக காத்திட - ஆறறிவின்
சக்தியாக மனித ஜீவனுக்கு கவசமாக மாறி அருள் தந்து காக்கும் தாயே! (79)

உமாதேவிசக்தியாக சிகை, சிரசு, நெற்றி, புருவம் புருவமையம் காத்திட - லட்சுமிவாஸினிதேவி
சக்தியாக நாசி, கண், காது, உதடு, நாக்கு, பல், முகவாய், பகுதியை அருள் தந்து காக்கும் தாயே! (80)

சரஸ்வதி தேவி சக்தியாக வாக்கு, சொல், அருள், கலை, வித்தை, செயல், காத்திட - பத்ரகாளிதேவி
சக்தியாக கழுத்து, தோள், முதுகு, புஜம், கைவிரல், பகுதியை அருள் தந்து காக்கும் தாயே! (81)

மகாதேவி சக்தியாக கக்கம், ஸ்தனம், மார்பு, இதயம், வயிறு, நாசி, இடுப்பு காத்திட - குஹ்யேங்வரிதேவி
சக்தியாக ரகஸ்ய ஸ்தானம், லிங்கம், அபானதுவாரம், குதம் பகுதியை அருள் தந்து காக்கும் தாயே! (82)

சிம்மவாகினி சக்தியாக தொடை, முழங்கால், பாதம், பாதவிரல் காத்திட - வாகீஸ்வரிதேவி
சக்தியாக நகம், கேசம், மயிர், தோல் பகுதியை அருள் தந்து காக்கும் தாயே! (83)

பார்வதிதேவி சக்தியாக இரத்தம், வீர்யம், கொழுப்பு, மாமிசம், எலும்பு, மூளை, காத்திட - பத்மாவதிதேவி
சக்தியாக குடல், பித்தம், கபம், ஆதார கமலம், பகுதியை அருள் தந்து காக்கும் தாயே! (84)

பிரம்ம தேவி சக்தியாக சுக்லம், சுரோணி, புத்தி மனம், ஆங்காரம் காத்திட - தர்மாவதிதேவி
சக்தியாக பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன், வாயுவை அருள் தந்து காக்கும் தாயே! (85)

சர்வமங்கள தேவி சக்தியாக தனம், பயிர், ஸ்தானம், கீர்த்தி, செல்வம், அழகு, காத்திட - இந்திராணிதேவி
சக்தியாக குலம், கோத்ரம், வம்சம், புத்திரர், வழங்கி ரட்சித்து அருள் தந்து காக்கும் தாயே! (86)

காமதேனு சக்தியாக தான, தர்மம், நந்தினி பசுக்களை காத்திட - சர்வ மாங்கல்ய மங்களதேவி
சக்தியாக மனைவி பாக்யம், பந்தம், பாசம், நட்புகளுடம் அருள் தந்து காக்கும் தாயே! (87)

விஜயதேவி சக்தியாக எல்லாமார்க்கங்களிலும் நற்செயல் செய்திட - பரபிரம்ம தேவி
சக்தியாக எல்லா அகத்திலும் புறங்களிலும் ஜெயத்தை அளித்திட அருள் தந்து காக்கும் தாயே! (88)

சரணம் சரணம் ஓம் ஆதி சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் மூல சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் ஆதார சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் திரிசூல சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் குண்டலினீ சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் ஓம்கார சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் ஒளி சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் ஒலி சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் கால சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் பிரம்ம சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் அக்ஷ்ர லலிதாசெல்வாம்பிகை சக்தி அன்னையே சரணம் !
சரணம் சரணம் ஓம் பரபிரம்ம சக்தி அன்னையே சரணம் !

உன் பாதம் சரணம்! சரணம்!! சரணம்!!! தாயே!