ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம அகவல்
தேவியின் அருளாடல்களை சொல்லும் தேவீ பாகவதம் முதலிய பல நூல்கள் வடமொழியில் இருக்கின்றன. தேவியை வழிபடு கடவுளாகக்கொண்ட அன்பர்கள் அவற்றையெல்லாம படித்திருப்பார்கள என்று சொல்வதற்கு இல்லை, ஆனால் தேவீ உபாஸகர்கள் யாவரும் பாராயணம் செய்து பூஜையில் பயன்படுத்தும் நூல் ஒன்று உண்டு, அதுவே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம ஸதோத்திரம்.
அன்னையின் ஆயிரம் திருநாமங்களை அழகுபெறச் சொல்லுவது அது. தேவியின் ஆகமங்களிலும், தேவி சம்பந்தமான புராணங்களிலும், வேதோபநிஷதங்களிலும் உள்ள தேவியைப்பற்றிய உண்மைகளையெல்லாம் இங்கு கண்டுகொள்ளலாம். எல்லா ரத்தினங்களும் அடங்கிய பாற்கடல் இது,
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களிலும் அம்பிகையை ஆராதிப்போர் அநுபவித்து அறியும் உண்மைகளை இந்த அற்புத பதிவு அடுக்கடுக்காகச் சொல்கிறது. மந்திர சாஸ்திரமாகவும், காவியமாகவும், தத்துவ நூலாகவும் சொல்லுவதற்கு ஏற்ற பாங்குகள் இதில் உள்ளன.
இத்தகைய பதிவுக்கு தேவியின் பேரருள் பெற்ற ஸ்ரீ பாஸ்கரராயர் பாஷ்யம் அருளியிருக்கிறார். அவருடைய பேருரை இந்த பதிவுகளில் உள்ள அற்புதங்களையெல்லாம் கண்ணாடிபோலக் காட்டுகிறது.
இவ்வளவு சிறப்புடைய ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைத் தேவீயினிடம் உள்ள அன்பின் மிகுதி யால் தமிழில் அகவலுருவில் மாதுஸ்ரீ வி. ஆர். லக்ஷ்மி அம்மாள் அவர்கள் நன்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
அகவல் எளிதில் பாடத்தக்கது; எளிதில் பொருளே விளங்குவது, ஸ்ரீ பாஸ்கரராயர் பாஷ்யத்தையும் தேர்ந்து, நாமங்களுக்கு விளக்கமாயுள்ள பொருள்களையும் பல இடங்களில் இணைத்திருக்கிறார் இந்த அம்மையார்.
யாவரும் படிக்கத்தகுந்த எளிய நடையில் அமைந்த இது பாடியவருடைய பக்திச்சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. மகாமாதா ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகையம்மனின் திருவருளால் இது பலருக்கும் பயன்பட வேண்டூமென்று வாழ்த்துகிறோம்.
ஸ்ரீ ஜகதம்பீகையான ஸ்ரீ பரதேவதையின் திவ்ய மஹிமைகளை விளக்கும் நூல்களில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்திற்கு ஈடான மற்றோர் நூலை நாம் எங்கும் காணமுடியாது, உபநிஷத்துக்களில் பொதிந்துள்ள பல அரிய கருத்துக்களையும், மந்திர சாஸ்திரத்திலும், யோக நூல்களிலும் கூறப்பட்ட பல தத்வங்களையும் இங்கு காணலாம். அதிலும் ஓளபநிஷதமான அத்வைதம் நன்கு விளக்கிக்காட்டப்படுகறது. அம்பிகையை ஸச்சிதானந்த ரூபமான பரப்ரஹ்மதத்வமாகவே இங்கு வர்ணிக்கிறா. அம்பிகையின் பரமபக்தரும் சிறந்த அத்வைதியுமான ஸ்ரீபாஸ்கரராயர் இதற்கு மிகவும் வீரிவான வ்யாக்யானம் செய்துள்ளார். நாமாக்களின் கருத்துக்களை நன்கு தெரிந்து கொண்டு அர்ச்சனை செய்தாலும் பாராயணம் செய்தாலும் அதற்கு விசேஷ பலனுண்டு.
ஸ்ரீ பரமானந்த ஸிந்துவென்னும்
ஸ்ரீ லலிதா தீவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
துதி அகவல்
ஸ்ரீ விநாயகர் துதி
ஐங்கரத்தோனே சங்கரிபாலா
யானை முகவா வல்லபை கணவா
அம்பிகை ஸ்ரீ லலிதேசுவரியின்மிக
ரகசியமாகிய ஸஹஸ்ரநாமத்தை
எளிதாய் பக்தருணர்ந்திடும் வண்ணம்
எழுதியே தமிழில் துதித்திடவேணும்
கணபதியேநின் கோடமெழுது
கோலாலெழுதிக்கொடுத்திடுவாயே.
ஸ்ரீ பரமேசுவரியின் தூலவுடல் வர்ணனை
ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ
அகில ஜகங்களுக் அன்னையே போற்றி
அரசற் கெல்லா மரசியே போற்றி
ஆறாம் னாய ஸ்வரூபங்க ளெனவே
அதிரக ஸியமாய் ஆகம முரைக்கும், 1
பூர்வ பச்சிம தக்ஷிண உத்தர
மத்திய மெனமா மந்திர வடிவாம்
பஞ்ச ஸிம்ஹா சனங்களுக் கதிபதியாம்
பரையே ! த்ரிபுர ஸுந்தரியே போற்றி, 2
சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா
நிர்மல அறிவாம் சித்தெனு மக்கினி
குண்டத்தி லுதித்த சிவையே போற்றி,
துர்மதி யாகிய பண்டனை வதைத்தே
தேவரைக் கார்த்திடத் தோன்றினை போற்றி, 3
உத்யத்பானு-ஸஹஸ்ராபா சதுர்பாஹு-ஸமன்விதா
ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா
இளம்ரவி கோடியி னொளியே போற்றி
எழில்மிகு கரம் நான் குடையாய் போற்றி
ஆசை யெனும் கயிற் தரித்தனை போற்றி
அங்குச மாய் சினம் வகித்தனை போற்றி, 4
மனோரூபேக்ஷுகோதண்டா பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா
நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட-மண்டலா
மனமாம் கரும்புவில் கரத்தாய் போற்றி
ஐம்பொறி விடய அம் புடையாய் போற்றி
எழில்மிகும் நின்சென் நிறமா மொளியில்
மூழ்க பிர்மாண்டம மிளிர்வாய் போற்றி, 5
சம்பகாசோக-புன்னாக-ஸௌகந்திக-லஸத்-கசா
குருவிந்தமணி-ச்ரேணீ-கனத்-கோடீர-மண்டிதா
அஷ்டமீசந்த்ர-விப்ராஜ-தளிகஸ்தல-சோபிதா
பனிமலர் சூடிய குழலே போற்றி
பிரகாசிக்கும் மகுடம் தரித்தனை போற்றி
அஷ்டமி மதிபோ லழகிய நுதலாய்
அம்மை மஹாத்ரிபு ரேசுவரி போற்றி, 6
முகசந்த்ர-களங்காப-ம்ருகநாபி விசேஷகா
முகமாம் மதியின் களங்கத்தைத் திரட்டி
நுதலிடை திலகம் என நீ தரித்தாய், 7
வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா
வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலன்-மீனாப-லோசனா
அம்மைநின் முகமா மனங்கன் மனையின்
தோரணமென நின் புருவங்கள் தோணும்
நின்முக வெழிலெனு மரும்பெரு மருவியில்
களிக்கும் மீனென விழிகளும் காணும். 8
நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா
தாராகாந்தி-திரஸ்காரி நாஸாபரண-பாஸுரா
கதம்ப-மஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹரா
சண்பக மலரென நாசிகை யுடையாய்
சுக்கிரன் போலொளிர் மூக்கணி யுடையாய்
கதம்ப மலர்களைக் காதிடை சொருகிய
வதனால் மிகுதியு மழகினை யுடையாய், 9
தாடங்க-யுகளீபூத-தபனோடுப-மண்டலா
பத்மராக-சிலாதர்ச-பரிபாவி- கபோலபூஹு
நவ-வித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி தசனச்சதா
அம்மை நின திரு செவிகளி னணிகள்
செம்மை மிகும் ரவி சந்திர ராவர்
மாணிக்கச் சில்லினைப் பழிக்கும் கன்னங்கள்
மேலாம் பவளத்தை யிகழ்ந்திடு மிதழ்கள் 10
சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்த்தி-த்வயோஜ்வலா
கர்ப்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷத்-திகந்தரா
ஒப்பற்ற முப்பத்தி யிரண்டு வித் தைகள் போல்
அற்புத மாக நின் தந்தங்கள் ஒளிரும்
வதன த்தி லடக்கிய வாசனைத் தம்பலம்
மிக்கவு மினிப்பாய் திக்கெங்கும் கமழும். 11
நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்ப்பர்த்ஸித-கச்சபீ
மந்த-ஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்- காமேச-மானஸா
யாழினைப் பழித்திடு மினிய மென் மொழியாய்
நின்பதி காமே சுவரரது மனதுன்
புன்னகை யாமொளி அருவியில் மூழ்கிப்
போனதே யாமெனப் புலவர்க ளுரைப்பர் 12
அநாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ- விராஜிதா
காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர- சோபித- கந்தரா
உவமையிலா முகவாய்க் கட்டை யுடையாய்
உன் பதி கரத்தால் பூட்டிய மாங்கல்யக்
கயிறது விளங்கும் வலம்புரி சங்கென
கண்டோர் வியக்கும் கண்டம துடையாய், 13
கனகாங்கத-கேயூர-கமநீய-புஜான்விதா
ரத்நக்ரைவேய-சிந்தாக-லோல-முக்தா-பலான்விதா
காமேசுவர-ப்ரேமரத்ன- மணி-ப்ரதிபணஸ்தனீ
செம்பொன் கடகங்கள் மிளிர்புய முடையாய்
திவ்ய மஹாரத்ன ஹாரங்க ளுடையாய்
நின்பதி அன்பெனும் ஒப்பற்ற மணியை
தனமெனும் பொருளால் தன்வய மாக்கினை 14
நாப்யாலவால-ரோமாளி-லதா-பல-குசத்வயீ
லக்ஷ்யரோம- லதா-தாரதா- ஸமுன்னேய-மத்யமா
உந் தியி லுதித்த வுரோமக் கொடியின்
பழங்க ளென்றே நின் குசங்களைப் பகர்வர்
உமையே ரோமக் கொடியிருப் பதனால்
ஊஹிக்க லாகும் நின துண் ணிடைதான், 15
ஸ்தனபார-தலன்-மத்ய- பட்டபந்த-வலித்ரயா
அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்- கடீதடீ
ரத்ன-கிங்கிணிகாரம்ய- ரசணா-தாம-பூஷிதா
பருத்தநின் தனத்தா லிடையொடி யாவண்ணம்
பொருத்திய பூணொக்கும் உதர மடிப்புகள்
சிறந்த பட்டாடை யிலங்கிடு மிடையாய்
திவ்யகிங் கிணியுள மேகலை யுடையாய். 16
காமேச-க்ஞாத-ஸௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா
மாணிக்ய-மகுடாகார-ஜாநுத்வய-விராஜிதா
இந்த்ரகோப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப- ஜங்கிகா
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா
நின்பதி சிவனார் ஒருவரே யறிவர்
ஸுந்தர மரமிரு துடைகளின் மேன்மையை. 17
மாணிக்க மகுடம் போலும் நின் முழங்கால்
மதன தூணீரம் போல நின் ஜங்கைகள்
கூடமா மழகிய குதிகா லுடையாய்
கூர்ம முதுகை யொக்கும நின் புறங்கால்கள் 18
நக-தீதிதி- ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா
நின்னடி பணிவா ருளத்துள விருளை
நீக்கிடும் நின் நக வொளி யெனும் பரிதி
பதத்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா
ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர- மண்டித-ஸ்ரீபதாம்புஜா
செந்தா மரைகளை ஐயித்த மெல் லடியாய்
செஞ்சிலம் பொலித்திடும் திருவடி யுடையாய் 19
மராளீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதிஹீ
அன்னப் பேடென அமர்ந்தமெந் நடையாய்
அகில வெழில்களுக் கெல்லையே யாவாய்
ஸர்வாருணா-நவத்யாங்கீ-ஸர்வாபரணபூஷிதா
அணி துகில் மாலை பூஷணம் சந்தனம்
அனைத்திலும் செந்நிறம் வகித்தனை போற்றி.
நின்னிடை குறையோர் வகையிலு மில்லை
நிறையவே பூஷண மணிந்தனை போற்றி 20
சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வா தீநவல்லபா
சிவகா மேசுவர ரெனும் பதி மடிமேல்
சீருட னமரும் சிவையே போற்றி. 21
மங்களரூபி சிவையே போற்றி.
மாலயன் தேடியும் காணாச் சிவனார்
நின்வய மாயவர் நிற்குமற் புதம்தான்
என்னே ! என்னே | இயம்பவொண் ணாதே. 22
ஸுமேரு-மத்ய ச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர நகர-நாயிகா
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸநஸ்திதா
மேருவின் மத்திய சிகரத்தி லமர்ந்தாய்
மேலாம் ஸ்ரீபுர நாயகி யானாய்
சிந்தா மணி கிருஹ மத்தியி லிருந்தாய்
சீருடன் பஞ்ச பிர் மாஸனத் துறைந்தாய், 23
மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தா கதம்பவன-வாஸிநீ
அழகு செந் தாமரைக் காட்டிடை வசிப்பாய்
அற்புத கதம்ப வனத்திலு மிருப்பாப்
ஸுதாஸாகர-மத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ
திவ்யா மிருதமாம் ஸாகர மத்தியில்
சிறப்புடன் வசிக்கும் சிவையே போற்றி. 24
காமனைக் கண்ணிடை கிரஹித்தாய் போற்றி
கனிவுடன் பக்தர் விரும்பிடு மவற்றை
கருணை பொழிந்திடும் கடைக்கண் ணோக்கால்
கணத்தில் தரும் கா மாக்ஷியே போற்றி 25
ஸ்ரீ தேவி பண்டனை வதைத்தது
தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமா நாத்ம-வைபவா
தேவ ருடன் முனி ஸித்த கணங்களும்
திருவடி தொழுதுன் மகிமையைப் புகழ்வர்
பண்டாஸுர-வதோத்யுக்த சக்திஸேநா-ஸமந்விதா
பண்டனை வதைத்திட சக்திகள் சேனையைத்
திரட்டியே போர்செய்யப் புறப்பட் டனை நீ. 26
ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வ்ரஜ-ஸேவிதா
அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபி-ராவ்ருதா
ஸம்பத் கரியெனும் சக்தியின் யானைப்
படைகள் சூழ்ந்திட புறப்பட்டனை நீ
துரகா ரூடையின் குதிரைப் படைகளின்
கோடி கள் சூழ புறப்பட்டனை நீ 27
சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதா
ஸர்வா யுதமுள ஸ்ரீ சக்ர ராஜ
ரதந்தனி லேரி நீ புறப்பட் டனை
கேய சக்ரரத மேறிய மந்திரிணீ
முன் செலப் போருக்கு முனைந்திட்டனை நீ 28
கிரிசக்ர-ரதாரூட தண்டநாதா-புரஸ்க்ருதா
ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த-வஹ்நி-ப்ராகார-மத்யகா
கிரிசக்ர ரதத்தில் ஏறிய வாராஹி
மூன்செலப் போருக்கு நீ முனைந் திட்டனை
ஜ்வாலா மாலினி சக்தி யமைத்த
அக்கினிக் கோட்டையி லமர்ந்தங் கிருந்தனை, 29
பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா
நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகா
பண்டனின் அஸுரப் படைகளைச் சக்திகள்
கண்ட துண்டமிடக் கண்டே மகிழ்ந்தனை
நித்யா சக்திகள் போர்செய அவரின்
பராக்ரம மதனைப் பார்த்தே மகிழ்ந்தனை. 30
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா
நின்மகள் பாலை சின்னஞ் சிறியவள்
குதித்தவ ளோடி பண்டனின் மைந்தரை
மெத்தவும் லகுவாய் யுத்தத்தில் வீழ்த்திட
கண்டதை யானந்தம் கொண்டங் கிருந்தனை. 31
மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா
விஷங்கனைப் போரில் வீழ்த்திய மந்திரிணீ
சக்தியிடம் சந்தோ ஷம் நீ கொண்டனை
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா
விசுக்ரனைப் போரில் வீழ்த்திய வாராஹீ
சக்தியிடம் சந்தோ ஷம் நீ கொண்டனை, 32
காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேச்வரா
நின் பதி காமே சுவரர் முகம் நோக்கி
தந்தி வதனரை நீ பிறப் பித்தாய்
மஹாகணேச-நிர்ப்பிந்ந -விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா
விக்ந யந்த்ரங்களை வேருடன் பிடுங்கிய
அத்தி முகனைக் கண்டு மெத்தவும் மகிழ்ந்தாய் 33
பண்டாஸுரேந்த்ர-நிர்முக்த சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ
பண்டன் விடுத்திட்ட அஸ்திரங்க ளுக்கு பதில்
விடுத்தே கடும் போர் அவனுடன் தொடுத்தாய்
கராங்குளி-நகோத்பந்ந-நாராயண-தசாக்ருதிஹி
அச்சுத ரின் தச அவதா ரங்களும்
நின் கைவிரல் நகங்கள் நின்றே யுதித்தன. 34
மஹா-பாசுபதாஸ்த்ராக்நி-நிர்தக்தாஸுர–ஸைந்யகா
பாசுபத அஸ்த்ரத்தால் பண்டன் படைகளை
ஒக்கவே எரித்தங் கொழித்திட் டனை நீ
காமேச்வராஸ்த்ர-நிர்தக்த-ஸபண்டாஸுர-சூந்யகா
காமேச அஸ்த்ரத்தால் சூன்ய புரத்துடன்
பண்டனை எறித்த பரையே போற்றி 35
ஸ்ரீ தேவி காமனை எழுப்பியது
ப்ரஹ்மோபேந்த்ர-மஹேந்த்ராதி-தேவ-ஸம்ஸ்துத-வைபவா
ஹர-நேத்ராக்நி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநௌஷதிஹி
மாலயன் போற்றிடும் வைபவ முடையாய் !
நின்பதி அரனார் நேத்திர விளக்கில்
விட்டிலைப் போல் எறிந் தழிந்திட்ட காமனை
அமுதம் பொழியும் நின்னருள் நோக்கால்
எழும்படி செய்தனை ஈசுவரி ! போற்றி 36
ஸ்ரீ தேவியின் ஸ்ரீ வித்யா மந்த்ரஸ்வரூபம்
ஸ்ரீமத்-வாக்பவ-கூடைக- ஸ்வரூப-முக-பங்கஜா
கண்டாத:-கடிபர்யந்த-மத்யகூட-ஸ்வரூபிணீ
சக்தி-கூடைகதாபந்ந - கட்யதோ-பாக-தாரிணீ
அன்னாய் நின்முகம் வாக்பவகூடம்
அழகிய மார்பே அனங்கனின் கூடம்
கடிமுத லடிவரை சக்தியின் கூடம்
மூலமந்த்ராத்மிகா மூலகூடத்ரய-களேபரா
காதி மஹாமந் திரம் நின துருவே. 37
மூலமந் திரத்துள முக்கூ டங்களும்
அங்கங்க ளாயவை அமைந்தன நினக்கே
பூர்ணா ஹந்தை பாவனை யளித்திடும்
புண்ணீய மூல மந்திரம் நீயே 38
ஸ்ரீ தேவியின் குண்டலிநீ ஸ்வரூபம்
குலாம்ருதைக-ரஸிகா குலஸங்கேத-பாலிநீ
சுழிமுனை நாடியி னமுதினைப் பருகும்
சூக்ஷ்ம சக்தி குண்டலி நீயே
குலவா சாரத்தின் ரகசியம் கார்ப்பாப்
குலாங்கனா குலாந்தஸ்தா கௌலிநீ குலயோகிநீ
குலமக ளாகும் சாம்பவீ வீத்தை நீ 39
குலத்துள் வஸித்திடும் தேவியும் நீயே
குலங்கள் தோறும் பூஜிப்பர் நினையே
பரையே ஸ்ரீ சக்ர பீடத்தில் கௌலர்
பூஜிப்பர் நின்னை வெளிப்புற மதனில். 40
சக்தி யெனும் குலம் நீயே யாவாய்
சிவனார் தமையே அகுலமென் றுரைப்பர்
குலமாம் சக்தியில் சிவமாம் அகுலம்
கூடிடு மதனைக் கெளலமென் றறிவர். 41
குலத்தில் சேர்ந்தே நீ யிருப் பதனால்
குலயோ கினி நீ யாகுவை போற்றி
அகுலா
உடல் வம்சம் முதலாகிய குலங்கள்
ஒன்று மிலை நினக் ககுலை யாவாய். 42
ஸ்ரீ தேவியாகிய குண்டலியை ஸமயாசாரர் பூஜிக்கும் முறை
ஸமயாந்தஸ்தா ஸமயாசார-தத்பரா
தஹரா காயத்தில் ஸ்ரீ சக்ர பீடத்தில்
தேவி ஸதாநினை பாவனை செய்தே '
சக்தி சிவங்களின் ஐவகை ஸாம்யங்கள்
அறிந்தோர் ஸமயா சாரர்க ளாவர். 43
குருவரு ளதனால் உமையே ஸாதகன்
ஐவகை நால்வகை ஐக்யங்க ள றிந்தே
மஹாநவமியிரவு, வேத தீக்ஷை பெற்று
மண்டல மிட்டுக் குலகுண்டத்திலுறங்கும் 44
குண்டலி யாம் நினை எழுப்பியே நன்கு
கொண்டுவந் தே மணி பூரக மிருத்தி
பாத்யம் முதல் மணி பூஷண மீறாய்
பரிவுட னளித்து அனாஹத மேற்றி. 45
தாம்பூ லாதிகளளித்தங் கிருந்து
திவ்ய விசுத்தியின் சக்ர மேற்றி
சந்திர கலைகள் போன்ற பணிகளைக்
கொண்டுனை சங்கரி ஸாதக னர்ச்சித்து. 46
ஆக்கினை ஏற்றி நீராஜனம் செய்
ததற்கு மப்பால் ஜகதம்பிகை நின்னை
ஆயிரத் தெட்டிதழ் கமலத்தின் நடுவே
ஆனந்த ஸாகர பிந் துவிலிருக்கும் 47
ஸதாசிவ த்துடனே சேர்த்தே திரையிட்டு
ஸாதகன் வெளியில் கார்த்தங் கிருந்திட
பரனுடன் ரமித்தே பரவசையாகி
புறம்போந் தமுதைப் பொழிந்தவ னுடைய 48
தேஹத்தை தேஜோ மயமாய்ச் செய்தே
திரும்பியும் பிறவா நிலையதனை யளித்தே
மூல குஹரம் தனி லிறங்கி முன் போல் நீ
மண்டல மிட்டே துயில்வாய் போற்றி 49
மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதிநீ
மணிபூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதிநீ
மூலா தாரத்துக் குண்டலி நீயே
விழித்தங்கு முறிப்பாய் விதியின் கிரந்தியை
மணிபூ ரகமதி லெழும்பி நீ வருவாய்
மாலின் கிரந்தியை அறுத்தங் கெறிவாய் 50
ஸ்ரீ பரானந்தஸிந்துவில் முதல் தரங்கம் முற்றிற்று.
இரண்டாவது தரங்கம்.
ஆக்ஞாசக்ராந்தராளஸ்தா ருத்ரக்ரந்திவிபே
ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதாதாராபிவர்ஷிணீ
(ஸுதாஸாராபிவர்ஷிணி என்று பாடாந்தரம்)
ஆக்கினையில் ருத்ரக் இரந்தியை உடைப்பாய்
அப்பால் பீர்ம்ம ரந்திரம் பாய்வாய்
ஆயிரத் தெட்டிதழ்க் கமலத்தில் ஏறி
அமுதினைப் பொழியும் குண்டலி நீயே, 51
தடில்லதா ஸமருசி: ஷட்சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாஸக்தி: குண்டலிநீ பிஸதந்து தநீயஸீ ॥
மின்னற் கொடிபோல் நின்னொளி இருக்கும்
அன்னாய் ஆறுசக் கிரங்களுக் கப்பால்
நின்னிரு அடிக்கம லங்கள் இருக்கும்
புண்ணிய சிவத்தைப் புணர விரும்புவை. 52
ஜீவ கலைஎனும் குண்டலி நீயே
ஸுக்ஷுமத் தாமரை நூல்போல் இருப்பாய்
பவாநீ
பவமாம் கடலின் கரைசேர்த் தடியரை
பரிவுடன் காத்திடும் பவானி போற்றி 53
ஸ்ரீ தேவியின் கருணைவடிவு
பாவநாகம்யா பவாரண்யகுடாரிகா |
பத்ரப்ரியா பத்ரமூர்திர் பக்தஸெளபாக்யதாயிநீ ॥
பாவனை ஒன்றே நினைஅடை யும்வழி
பவவனம் வெட்டும் மழுவது நீயே
ஸந்ததம் மங்களப் பிரியைநீ ஆகுவை
சிவையே மங்கள உருவே போற்றி,
54
அடியார்க் கெல்லா ஸெளபாக் கியங்களும்
அளித்திடு வாய்நீ கணத்தினில் போற்றி
ஸம்ஸ்கிருத பாஷையில் மிகுந்த பரிச்சயமில்லாதவர்களும் சுலபமாக லலிதா ஸஹஸ்ரநாமக் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்வதற்காகவே மாதுஸ்ரீ லஷ்மீ அம்மாள் தமீழ் பாஷையில், அதிலும் மனதில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஸெளகர்யமாக அகவல் பாட்டுக்களாகவே லலிதாஸஹல்ரநாம ஸ்தோத்திரம் முழுவதையும் இயற்றித்தந்துள்ளார்கள். அவருக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.