2023 - விசேஷ/விரத நாட்கள்

2023 - விசேஷ மற்றும் விரத நாட்கள்

பௌர்ணமி மற்றும் பௌர்ணமி விரதம்
விஷேசம்
மாதம்
நாள்
கிழமை
பௌர்ணமி
மார்கழி 22
ஜனவரி 6,2023
வெள்ளி
பௌர்ணமி
தை 21
பிப்ரவரி 4,2023
சனி
பௌர்ணமி
மாசி 22
மார்ச் 6,2023
திங்கள்
பௌர்ணமி
பங்குனி 22
ஏப்ரல் 5,2023
புதன்
பௌர்ணமி
சித்திரை 22
மே 5,2023
வெள்ளி
பௌர்ணமி
வைகாசி 20
ஜூன் 3,2023
சனி
பௌர்ணமி
ஆனி 17
ஜூலை 2,2023
ஞாயிறு
பௌர்ணமி
ஆடி 16
ஆகஸ்ட் 1,2023
செவ்வாய்
பௌர்ணமி
ஆவணி 13
ஆகஸ்ட் 30,2023
புதன்
பௌர்ணமி
புரட்டாசி 12
செப்டம்பர் 29,2023
வெள்ளி
பௌர்ணமி
ஐப்பசி 11
அக்டோபர் 28,2023
சனி
பௌர்ணமி
கார்த்திகை 10
நவம்பர் 26,2023
ஞாயிறு
பௌர்ணமி
மார்கழி 10
டிசம்பர் 26,2023
செவ்வாய்
பௌர்ணமி விரத முறை

பௌர்ணமி விரதம் - 12 நாட்கள்

அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகை அம்மன் கௌரவமான அன்னை, இந்த பேரண்டத்தின் தாய், நாம் பூஜை செய்யும் இடமும், உடலும், மனதும் தூய்மையாக இருக்கும் போது பூஜையை தொடங்க வேண்டும். முடிந்தால் கண் மூடி 12 நிமிடம் அமைதியாக அமர்ந்து விட்டு பூஜையை தொடங்கலாம்.

அதிகாலை 6 மணிக்கு முன்னாள் பூஜையை முடிக்க வேண்டும். 12 நாட்கள் விரதம் இருந்து, 12ம் நாள் பௌர்ணமி பூஜையில் விரதத்தை முடிக்க வேண்டும்.

பூஜை செய்யும் முறை
அதிகாலையில் குளித்து விட்டு புது துணி (அல்லது துவைத்து உலர்த்திய துணி) உடுத்தி கொண்டு பூஜையில் அமர வேண்டும். அன்னை அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையை மனதார நினைத்து பூஜையை தொடங்க வேண்டும்.

  • குலதெய்வத்தை மனதார வழிபடவேண்டும்
  • 108 முறை அம்மனின் மூல மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும்
  • அம்மனின் 108 போற்றி படிக்க வேண்டும்
  • அம்மனின் கவசம் படிக்க வேண்டும்

16ம் ஆண்டு கும்பாபிஷேகம்
விஷேசம்
மாதம்
நாள்
கிழமை
கிராம தேவதைகளின் கும்பாபிஷேக விழா
ஆவணி 9
ஆகஸ்ட் 26, 2023
சனி
ஆலய கும்பாபிஷேக பதினைந்தாவது ஆண்டு விழா 15ம் ஆண்டு படங்கள்
ஆவணி 11
ஆகஸ்ட் 28, 2023
திங்கள்
நவராத்திரி

சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி.

நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு 'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்தது நவராத்திரி விழாதான்.

விஷேசம்
மாதம்
நாள்
கிழமை
நவராத்திரி 2023
புரட்டாசி 28 - ஐப்பசி 7
அக்டோபர் 15 - 24
அக்டோபர் 15, ஞாயிறு முதல் அக்டோபர் 24, செவ்வாய் வரை.