சர்வம் சக்தி மயம்
அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன் ஆலய பாமாலைகள்
- விநாயகர் காப்பு
- தாரகமந்திரம்
- காயத்திரி மந்திரம்
- த்யான ஸ்லோகம்
- துதி பாடல்
- அஷ்டோத்ர சத நாமாவளி
- அம்மன் கவசம்
ஆலயத்தின் சிறப்புகள்
நான்கு யுகங்களில் முதன்மையான கிரேதாயுகத்தில் இராமாவதாரம் ஜெனிக்க, தசரத மகாராஜாவுக்கு புத்திர காமேஸ்டியாகம் செய்வித்த கொம்புமகரிஷி எனும் ரிஷிய ஷிங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்த ஸ்தலம்
ரிஷிகளால் பூஜிக்கப்பட்டது என்பதன் அடையாளமாக உருவ வழிபாடு இன்றி கற்சிலையில் ( 4 x 2 அளவுள்ள கற்பலகையில் ) அவர்களின் வழிபாட்டு முறைகளான மந்திர எழுத்துக்களை அடையாள முத்திரைகளாக 12 கட்டங்களில் பதித்தும், சூரியன், சந்திரன் மற்றும் சூலாயுதம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆலய தகவல் பலகை
ஸ்தலம்:
செல்லப்பிராட்டி, செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்
மூலவர்:
ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை அம்மன்
சிறப்பு சன்னதிகள்:
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சூலினி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ எல்லை பிடாரி, ஸ்ரீ சப்த கன்னியர், ஸ்ரீ அம்மச்சார், ஸ்ரீ வனதுர்கா மற்றும் ஸ்ரீ வேடியப்பன்
அமைவிடம்:
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் செஞ்சிக்கு அருகில் (வளத்தி வழியாக மேல்மலையனுர் செல்லும் சாலையில்) சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
திண்டிவனத்திலுருந்து 30 கி.மீ. தொலைவிலும், மேல்மலையனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
ஆலய நடை திறப்பு நேரம்:
காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை
மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை
கூகுள் மேப் QR குறியீடு: